
அம்பாந்தோட்டையில் உள்ள திஸ்ஸ வாவியில் சீனப் பணியாளர்கள் சுத்திகரிப்பு பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராமத்திலுள்ள மக்கள் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களின் பின் நேற்று மாத்திரம் இரண்டு மணிநேரம் ஊழியர்கள் அந்த வாவி சுத்திகரிப்பில் ஈடுபட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் கடந்த மாதத்தில் பெரிதும் பேசுபொருளாக இருந்ததுடன், உலகளவில் இலங்கை அரசு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.