திருகோணமலை புல்மோட்டை காட்டாறு அணைக்கட்டு, வாய்க்கால் மற்றும் வீதி புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (2) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அத்துடன் பா.உ அவர்களின் குச்சவெளி இணைப்பாளர் , புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


