நாட்டில் சீனிக்கு தட்டுபாடு – நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடா இல்லை விலையேற்றமா என்று தெரிவிக்க முடியாத நிலையில் மக்கள் சீனியை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சதொச விற்பனை நிலையத்தில் விநியோகிக்கப்படும் சீனியை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *