பதுளை, எல்ல தெமோதர பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதில் இருவரும் கர்ப்பமுற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 மற்றும் 12 வயதான மகள்களையே குறித்த 37 வயதுடைய தந்தை கர்ப்பமாக்கி உள்ளார்.
14 வயதுடைய மகளை வயிற்று வலி காரணமாக அவருடைய தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் அவர் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது தந்தையினால் இவ்வாறு கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமியின் இளைய சகோதரியையும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய போது அவரும் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.