
கொழும்பு-மருதானை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என புகையிரத திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மருதானை ரயில் நிலையத்திலிருந்து பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தமது பயணங்களை முன்னெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.