
இஸ்ரேலிய துருப்புக்கள் காசாவிலிருந்து வெளியேறினால், தமது தரப்பிலுள்ள 50 பணயக் கைதிகளை விடுவித்து போர் நிறுத்தத்திற்கு செல்லத் தயார் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதங்களை களைந்து முழுமையாக சரணடைந்தாலே போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்துள்ளது.