மென்சிட்டி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது அல் ஹிலால் அணி

பிபா கழக மட்ட கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருகிறது 32 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் ரவுண்ட் ஒப் 16 சுற்றுக்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் மென்சிட்டி மற்றும் அல் ஹிலால் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. போட்டி தொடங்கி 09வது நிமிடத்தில் மென்சிட்டி அணியின் பேர்னான்டோ சில்வா தனது அணியை 1-0 என முன்னிவைப்படுத்தி அசத்தினார். அதன் பிறகு போட்டியில் தனது முதல் கோலினை பதிவு செய்ய அல் ஹிலால் அணியும் ஆதிக்கத்தை தக்கவைக்க மென்சிட்டி அணியும் போட்டி போட்டுக்கொண்டன.

இந்நிலையில் முதல் பாதியில் இது கைகூடாத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே மென்சிட்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது அல் ஹிலால் அணி. அவ்வணியின் மார்கஸ் லியனார்டோ 1-1 என போட்டியை சமப்படுத்தி அசத்தினார்.

இந்நிலையில் 52வது நிமிடத்தில் மெல்கம் அல் ஹிலால் அணியின் இரண்டாவது கோலினை பதிவு செய்து தனது அணியை 2-1 என்ற ரீதியில் முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் நட்சத்திர வீரர் ஏர்லிங் ஹாலண்ட் 55வது நிமிடத்தில் மென்சிட்டி அணிக்கு 2வது கோலினை பெற்றுக்கொடுத்தார். இதனால் மீண்டும் 2-2 என போட்டி சமநிலையானது.

பின்னர் இரு அணிகளும் வெற்றிக்கோலினை பதிவு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைய மேலதிக நேரம் வழங்கப்பட்டு போட்டி தொடங்கியது.94வது நிமிடத்தில் கலிடு கவ்லிபலி அல்ஹிலால் அணியின் 3வது கோலினை பதிவு செய்து அசத்தினார். பின்னர் இதற்கு பதிலடியாக மென்சிட்டி அணியின் பில் பொடன் தனது ஸ்டைலில் மென்சிட்டி அணியை 3-3 என சமப்படுத்தி அசத்தினார்.

யார் வெற்றியாளர் என்ற தீர்க்கமான தருணம் தொடங்கியது. போட்டியின் மேலதிக நேரத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் அதாவது 112வது நிமிடத்தில் மீண்டும் மார்கஸ் லியனார்டோ அல்ஹிலால் அணியின் முதல் கோலினை பதிவு செய்து அசத்தியது போன்று வெற்றிக்கோலினையும் பதிவு செய்து தனது அணியை காலிறுதிச்சுற்றுக்கு அழைத்து சென்றார். பெரும் எதிர்ப்பாரப்புடன் களமிறங்கிய மென்சிட்டி அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *