அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு குறித்து – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதும், வாக்களிப்பதும் தடுக்க இடைக்காலத் தடை வழங்கப்படமாட்டாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். 

இந்த மனு அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்  தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர், அரசியலமைப்பின் படி, அவர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று தெரிவித்தார். 

மேலும்  பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் சட்டத்தரணி வாதிட்டார். 

ஆனால்  அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்று தெரிவித்தார்

அதனால், அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று  குறிப்பிட்டார். 

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. 

பின்னர் குறித்த மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *