
பிரபல பாடகர் மொஹிதீன் பேக்கின் புதல்வரும் பாடகருமான இஷாக் பேக்கின் மருத்துவ செலவுகளுக்காக அரசாங்கம் ரூபா. ஒரு மில்லியன் நிதியை வழங்கியுள்ளது. புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி எச்.சுனில் செனவி, அண்மையில் நாட்டின் பிரபல மூத்த பாடகர் இஷாக் பேக்கை கொலன்னாவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.