
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹாஜிகள், தங்களின் பயண ஏற்பாடுகளை மேற்கொண்ட முகவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ, தபால் அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.