
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் மெளனம் காத்துவருவதானது அங்கு இடம்பெறும் அநியாயங்களுக்கு ஆதரவளிப்பது போன்றதாகும். அதனால் எங்களால் முடிந்தவகையில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.