லெல்லாமா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய தகவலின் பேரில்,பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
இந்நிலையில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது இதில் ஓருவர் காயமடைந்துள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேகத்திற்குரிய இரு நபர்களை நிறுத்த உத்தரவிட்டனர்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பொலிசாரின் உத்தரவை மீறி வேகமாக ஓட்டிச் சென்றதால், அவர்களை துரத்திய பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்
இதில், ஓட்டுநர் ஒரு லாரியில் மோதி தப்பிச் சென்றார். பின்னால் இருந்த மற்றொரு நபர் துரத்திச் சென்ற பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளைக் கைது செய்ய முயன்றபோது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் வீடியோ காட்சிகள், சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து மீட்கப்பட்ட பையில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
முழுமையான காணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்