செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும்- கடற்றொழில் அமைச்சர் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்

இன்று கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் செம்மணி படுகொலை தொடர்பாக ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததாவது

செம்மணி படுகொலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கோடுக்க வேண்டுமென்று கடும் சீற்றத்துடன் கூறியிறுந்தார் மேலும் செம்மணி படுகொலை சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும்

கடந்த காலங்களிலும் தமது தேசிய மக்கள் சக்தியின் ரோகன விஜய வீர போன்றவர்களுடன் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளன எனவும் இவ்வாறான நிலைமைகளே ஏற்பட்டிருக்கும்  அண்மையில் கூட இலங்கைக்கு வருகை தந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரிடமும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாங்கள் வலியுறுத்துவதாகவும் தற்பொழுது செம்மணி பகுதியில் தோண்டப்பட்ட சிறுவர்களின் உடலங்கள் மற்றும் முதியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் என்பனவற்றின் எலும்பு கூடுகளை மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன்  அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை  கண்டறிவதாயின் பல வருடங்கள் ஆகும்

எனவே தற்பொழுது வருகை தந்துள்ள மனித உரிமை ஆணையாளரிடம் தற்பொழுது செம்மொழி பகுதியில் அகலப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான கருவிகளை இலங்கைக்கு வழங்கி மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலுயுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *