கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிக்காக சென்றவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
வேலாயுதம் ஜெயரூபன் என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர்
தூண்டில் மீன் பிடிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.