இணைய பாவனை தொடர்பான செயலமர்வு!

இணைய பாவனை  தொடர்பிலான சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலை சர்வோதய நிலையத்தில் கடந்த (01) இடம்பெற்றது.

Digital Democracy Initiatives ஊடாக CIVICUS மற்றும் சேர்வின்ங் ஹியுமனிட்டி பவுண்டேசன்   ஆகியன இணைந்து குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்தனர். 

இதன்போது செயலமர்வின் விரிவுரையாளராக கிண்ணியா வலயக் கல்வி அலுவலக தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரிஸ்வான், இணைய பாவனை, இணைய குற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான விளக்கங்களை  முன்வைத்தார்.

செயலமர்வில்  சேர்வின்ங் ஹியுமனிட்டி பவுண்டேசனின் பொது செயலாளர் ஏ.எம்.முர்ஷித், திட்ட உத்தியோகத்தர் ஐ.துவாரகா உட்பட  சமூக சிவில் அமைப்புக்களை சேர்ந்த சுமார் 30 உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *