யாழில் பரிதாபமாக உயரிழந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு

 

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை  இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு நேற்றையதினம் (03) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தாயார் பனடோல் சிறப் கொடுத்துள்ளார். 

பின்னர் இன்றையதினம் காலை குழந்தை அழுதுவிட்டு மயக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இருப்பினும் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *