திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நான்காவது வருட நிறைவு விழா, திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை (5) நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்களின் வாண்மை விருத்தி செயற்பாடுகளுக்காக ஊடக உபகரணங்கள், ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
ஒன்றியத்தின் தலைவர் அமரஜீவ அமதுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த திசாநாயக்க மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.