வேகமடையும் பூமியின் சுழற்சியால் குறையும் நாட்கள்; அதிசயமா? ஆபத்தா?

 

சமீபத்தில் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்த விடயம்  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நேரம் சிறிது குறைவாகும் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இது 1.3 முதல் 1.5 மில்லி செக்கன் வரை குறையும் எனவும் இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2029ஆம் ஆண்டில் சில செக்கன்களை நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 

பூமியின் குறைந்து வரும் சுழற்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள அணு கடிகாரங்களில் லீப் வினாடிகள்  சேர்க்கப்படுகின்றன.

இவ்விதமான சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டில் ஆரம்பமாகியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *