வவுனியா நகரப்பகுதிக்குள் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்!

வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளது.

தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின்னால் உள்ள பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது.

இதன்போது சில கட்டடங்களின் மதில்சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.

தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக வெளியேவரமுடியாமல் தத்தளித்த நிலையில் சம்பவம் தொடர்பாக வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த யானை வழிதவறி நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *