வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில இன்று ஆரம்பமானது.
வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும்,வடமாகாண பூப்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.பிரின்ஸ் லெம்பேட் தலைமையில் போட்டி ஆரம்பமானது.
குறித்த போட்டியில் வடக்கு மாகாணத்தில் இருந்து 6 அணிகளும்,அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வான இன்று விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் ,மன்னார் நகர முதல்வர் உதவி மாவட்டச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் வரவேற்கபட்டு இன்று ,நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அணிகளின் அறிமுகமும் இடம் பெற்றது
இந்த நிலையில் முதல் சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளதுடன் நாளைய தினம் இறுதிச் சுற்று போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற உள்ளன.