
வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் கைது செய்ய வட்டுக்கோட்டை பொலிஸார் ஆரம்பத்தில் பின்னடித்த நிலையில் பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கவென பியர் ரின்களுடன் பருத்தித்துறை வாசிகள் இருவர் சிகிச்சை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்தனர்.