
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி இன்று பேசுபொருளாக மாறியுள்ளதுடன் சர்வதேச கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாகவே அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியினை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.