
காஸா யுத்த நிறுத்தத்திற்கு ‘எமக்கு கால அவகாசம் தேவை’ என கட்டார் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யுத்த நிறுத்தம் தொடர்பில் சாத்தியமான முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் தேவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08) கட்டார் தெரிவித்தது,