நுவரெலியா மாவட்டம், தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட சிவன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹங்குராங்கெத்த பிரதேச சபை உப தவிசாளர் கே.ரூஸன்ஸ் மற்றும் அப்பகோணா தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டார தோட்ட உதவி முகாமையாளர் சமீர அதிகாரிகள் தலைமையில் குறித்த ஆலயத்தின் நிர்மான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது ஞாபக சின்னமாக மரகன்றுகள் நாட்டி வழிப்பாடுகள் இடம்பெற்றன. இதில் தோட்ட தலைவர்கள், மற்றும் தோட்ட மக்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
இதேவேளை நாட்டின் பல பாகங்களில் வசிக்கும் சிவ பக்தர்கள், பணம் படைத்தவர் மற்றும் நல்ல உள்ளங்கள் குறித்த ஆலயத்திற்கு பொருட்கள் அல்லது நிதி உதவிகளை வழங்கி தமது ஆலயத்தை முழுமை பெறச் செய்ய உதவுமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.