அனைத்து காணாமலாக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு – கிளிநொச்சியில் சம உரிமை இயக்கம் கையெழுத்துப் போராட்டம்!

கிளிநொச்சி நகரில், சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று நடைபெற்றது.  

இந்த நிகழ்வின் மூலம் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இப்போதாவது நீதி வழங்கப்பட வேண்டும்

 PTA  உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்,

மற்றும் எல்லா தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பு தேவை என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சம உரிமை இயக்கத்தினர், இது போன்ற பிரச்சாரங்கள் தொடரும் என்றும், சர்வதேச சமுதாயம் மற்றும் அரசை உள்நோக்கி வலியுறுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இப்போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *