திருந்துமா யாழ்.மாநகரசபை? குப்பைகளை அள்ளி வீதிகளில் வீசிச்செல்லும் அலட்சிய காட்சி

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாநகரசபையின் குப்பை ஏற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகள் விழுந்து வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்.மநாகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், வீதியோரங்களில், கடைகளில் உள்ள குப்பைகளை மாநகரசபைக்குச் சொந்தமான குப்பை அகற்றும் வாகனம் ஏற்றிச் செல்வது வழமையான செயற்பாடாகும். 

அதற்கமைய யாழ்ப்பாணப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீதி வீதியாகச் சென்று குப்பை அகற்றும் வாகனம் மூலம் ஊழியர்கள் குப்பைகளை ஏற்றிச் சென்றனர். 

இதன்போது  குப்பை ஏற்றிவிட்டு வாகனம் சென்று கொண்டிருந்த வீதிகளில் குப்பைகள் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனை ஊழியர்களும் கண்டுகொள்ளமால் சென்றுள்ளனர். 

குப்பைகள் சில யாழின் பிரபல பாடசாலையின் வீதி அருகிலும் விழுந்து கிடக்கின்றன. இது மாணவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதுடன் மாணவர்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு வீதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே குப்பைகள் வீதியில் கொட்டப்பட்டுச் செல்வதை மாநகரசபை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது மாநகரசபையின் அலட்சியமா? என்ற ரீதியில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *