இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் – முஸ்லீம் கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாறு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சபையில் இம் முறை தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்பதுடன் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்க்கட்சிகள் முன் வர வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திகளை வேலை வாய்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என்று தெரிவித்துள்ளார்.