கொழும்பு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில்(Police Field Force Headquarters ) புதிதாக மேம்படுத்தப்பட்ட ‘ரு சிரி’ எனப்படும் அழகுக் கலை நிலையம், நேற்று (15) பதில் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீராரியாவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் சேவையின் மகளிர் பிரிவால் தொடங்கப்பட்ட இந்த அழகுக் கலை நிலையம், பொலிஸ் அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு குறைந்த விலையில் அழகுபடுத்தும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொலிஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அழகுபடுத்தல் மற்றும் அழகு பராமரிப்பை அணுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்த முயற்சியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பொலிஸ் அதிகாரிகளின் அனுபவம் வாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அழகு நிலையத்தில் சேவைகளை வழங்க வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாடு முழுவதும் இதேபோன்ற சேவை மையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொலிஸ் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பயனடைய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.