கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.7 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய டென்மார்க்கைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
25 சிற்றுண்டிப் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை இவர் கடத்த முற்பட்டதாக விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப்பொருளை அவர் தாய்லாந்தில் இருந்து வாங்கியதாகவும், பின்னர் இந்தியா வழியாக நாட்டுக்கு வருகை தந்ததும் தெரியவந்துள்ளது.