
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதான முஹம்மது சுஹைல் எனும் இளைஞர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.