
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் விசாரணைகளிலும் திருப்தியில்லை. அதிகாரத்துக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதைவிட இரண்டு மடங்கு இந்த அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.