
கடந்த ஜூன் மாதத்தில், இஸ்ரேலிய படைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அமெரிக்க – இஸ்ரேலிய ஆதரவு உணவு விநியோக அமைப்பான காஸா மனிதாபிமான அறக்கட்டளையிலிருந்து உணவு உதவிகளை பெற வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன. பத்தொன்பது தனித்தனி சம்பவங்களில் இதுவரை 849 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.