வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலை! அரசாங்கத்தின் மீது சஜித் பாய்ச்சல்!

நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் இயலாமையின் உச்சக்கட்டத்தை எடுத்துக் காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசய பொருட்களின் விலைகளை கட்டுபடுத்த முடியாத அரசாங்கம் அதனை மூடி மறைப்பதற்காக அவசரநிலைமைய அமுலாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2003 9ம் இலக்க நுகர்வோர் சட்டத்தை பயன்படுத்த முடிந்த போதும் அதனை அரசாங்கம் செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மோசடியான நிர்வாகம் மற்றும் இயலாமை காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அந்நிய செலாவணி மிகவும் குறைந்துள்ளதாகவும் அதனை பெறுவதற்காக வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *