இலங்கைக்கு 11 வயது சிறுவனால் கிடைத்த சர்வதேச வெற்றி

ஐக்கிய இராச்சியத்தில் சர்வதேச வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த 11 வயது சிறுவன் மற்றும் புகைப்படக் கலைஞர் சிறப்புப் பாராட்டு மற்றும் வெற்றியை பெற்றுள்ளனர்.

11 வயது ககனா மெண்டிஸ் விக்ரமசிங்க மற்றும் புத்தினி டி சோய்சா ஆகியோர் 2021 ஆம் ஆண்டின் வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் போட்டி சிறப்பு நடுவர் மன்றத்தின் பாராட்டினை பெற்று கொண்டனர்.

போட்டிக்கு ஐம்பத்தேழாயிரம் வனவிலங்கு புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் நடுவர் மன்றம் 1,000 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தது.

மெண்டிஸ் விக்கிரமசிங்கவின் ‘lockdown chicks ‘ என்ற பெயர் சூட்டப்பட்ட கிளிகளின் புகைப்படம் மற்றும் புத்தினி டி சோய்சாவின் ‘A great swim’ என்று பெயரிடப்பட்ட புகைப்படம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சிறப்பு புகைப்படங்களில் அடங்கும்.

இதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் ருக்ஷன் ஜெயவர்த்தனா 2002 இல இத்தகைய வெற்றியைப் பெற்றிருந்தார். 19 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

ககனா மெண்டிஸ் விக்கிரமசிங்க ஊர்வன விஞ்ஞானி மெண்டிஸ் விக்கிரமசிங்க மற்றும் நெத்து விக்கிரமசிங்கவின் இரண்டாவது மகன். கடந்த ஆண்டு (2020) ஊரடங்கு உத்தரவின் போது ககனா புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அவருக்கு 10 வயது. ககனா தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர.மற்றும் சுற்றுச்சூழலின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *