ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கம்பஹா தேவா என்ற திசாநாயக்ககே தேவான் மினி திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று காலை 8.10 மணியளவில் தாய்லாந்துக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என்றும், அந்தப் பகுதி முழுவதும் நடந்த மனித கொலைகள் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை டுபாய் சுத்தா என்ற பிரசாத் சதுரங்க கோதாகொடவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் பாணந்துறை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.