நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குறைந்தது 6 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிகிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவர் என பிரதமர் ஜசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதலானது, ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்ட ஒருவரே இவ்வாறு சூட்டு கொல்லப்பட்டுள்ளதோடு, குறித்த நபரினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி ,கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை ,தேர்வு செய்தி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





