அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ள பேரழிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்வு!

அமெரிக்காவின் வடகிழக்கில் சூறாவளி, மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

இடா சூறாவளியை தொடர்ந்து நியூயோர்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், மேரிலாந்து மற்றும் பென்சில்வேனியா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான வானிலை காரணமாக நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி இரண்டும் அவசரகால நிலையை அறிவித்துள்ளன.

நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் 2 வயது சிறுவன் ஆகியோர் நகரத்தில் ஏற்பட்ட தனித்தனி வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட எட்டு பேரும் குயின்ஸில் வசித்து வந்தனர் மற்றும் குடியிருப்பு வீடுகளின் அடித்தளத்தில் இறந்தனர் என்று நியூயோர்க் பொலிஸ் துறை ஆணையர் டெர்மோட் ஷியா தெரிவித்தார்.

நியூயார்க் நகரப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ நேற்று (வியாழக்கிழமை) மாலை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *