இருபாலையில் மக்கள் குறைகளை கேட்டறிந்த சிறீதரன் எம்.பி!

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருபாலை பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கும் இடையிலான மக்கள் குறைகேள் சந்திப்பு, இருபாலை அன்னை இந்திரா சனசமூக நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

இருபாலை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி உசாயினி சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தரையாடலில் கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமது பிரதேசத்தின் தேவைப்பாடுகள், உட்கட்டுமான அபிவிருத்தி எதிர்பார்ப்புகள் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக, உள்ளக வீதிகளுக்கான பெயர்ப்பலகையிடல், இருபாலை தெற்கு, மேற்கு கிராமங்களில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, பொதுநோக்கு மண்டபம் இன்மை, செக்கடி இந்துமயான வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளின் புனரமைப்பு, மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் கந்தவேள் அ.த.க.பாடசாலைக்கு நீண்டகாலமாக அதிபர் நியமிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சபை உறுப்பினர்களான கமலறேகன், கஜேந்திரகுமார், கஜேந்தினி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளை உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *