வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், மற்றும் தாதியர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதுடன், தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்படும் சுகாதார துறைசார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது





