தடுப்பூசிக்காக ஒன்றுதிரண்ட மக்கள்- குவிந்த பொலிஸ்! நடந்தது என்ன?

வெலிகம பகுதியில் கொரோனா தொற்றுக்ககான தடுப்பூசியை பெறுவதற்கு சென்ற மக்களினால் சற்று குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெலிகம, கொரோனா தடுப்பூசி மையத்தில் இம்மாதம் 1 ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்டிருந்த மருத்துவர் மற்றும் செவிலியரை மீட்க வெலிகம காவல்துறை தலையிட்டு பிரச்சனையை தீர்த்துள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவது,

வெலிகம சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சேவை பிரிவுகளில் உள்ள 30-60 வயதிற்குட்பட்டவர்கலுக்கு இடையில் கடந்த ஜூலை 25 ஆம் திகதி முதல் தடுப்பூசி இந்த இடத்தில் செலுத்தப்பட்டது.

இரண்டாவது தடுப்பூசி 1 ஆம் திகதி காலை செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.

அதன்படி, படவால, பதேகம, தேனிபிட்டிய, கடேவத்த, பெலான, வலான, முடுகமுவ மற்றும் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முதல் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இடத்திற்கு வந்தனர்.

எனினும், தற்போது காணப்பட்ட 2920 ஊசி மருந்துகளும் முடிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் இருந்து அனைவரும் களைந்து செல்லுங்கள் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுப்பூசி கிடைகாத காரணத்தினாலேயே மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

இருப்பினும், சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் பலமுறை எச்சரித்த போதிலும், அந்த இடத்திற்கு வந்த மக்கள் தடுப்பூசி போடுமாறு கோரி அசௌகரியமாக நடந்து கொள்ளத் தொடங்கினர்.

மேலும், நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் ஏ. எச் எம். நிஹால் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களிடம் ஜூலை 25 அன்று முதல் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது என்று கூறினார்.

அத்துடன், மீதமுள்ள தடுப்பூசிகளை முதல் ஒரு குழுவிற்கு கொடுப்பதற்கு மருத்துவ அதிகாரி முடிவு செய்திருந்தார்.

இதேவேளை, அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான வெலிகம பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *