நாட்டில் நேற்றைய தினம் ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 447 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஏனைய 5 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 283,512 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.