நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் வேளை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதேவேளை கிளிநொச்சி மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நாளையும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தடுப்பூசித் தொகுதியை நாளையே இலங்கை வரும் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் அது இங்கு வந்து சேர்ந்த பின்னர் மக்களுக்கு தகவல் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் முன்னதாக கடந்த வாரம் 2ஆம் கட்டத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துச் சென்று திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





