
கொரோனாச் சாவு எண்ணிக்கையை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று கொரோனாத் தடுப்புக்கான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தாார்.
அதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் நோக்கம் தமக்குக் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கொரோனா தாக்கினால் அவர்கள் தொற்றிலிருந்து தப்புவது கடினம். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்.
எனினும், அனைவரும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




