அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்ப்புகளையும் மீறி அவசரக் காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவ ஆட்சியை நாட்டில் நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
அத்தோடு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின்விலைகளை அவசர காலச்சட்டத்தை தவிர சாதாரண நடப்புச் சட்டங்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும் .
மேலும் சீனி, எரிபொருள், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுவான சட்டங்களே போதுமானவை. இன்று அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்.
அன்டிஜன் தொடக்கம் அரிசி வரை அரசாங்கத்துடன் தொடர்பிலிருப்பவர்களே இறக்குமதி செய்கின்றனர். நேரடியாகவே அவர்களுக்கு பணிப்புரையை கோட்டாபயவினால் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எனினும் அவசரகாலச் சட்டத்தை கொண்டுவந்து இந்த மோசடிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை காண்பிக்கவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.





