
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன் நிவாரணத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்கு அறிவுறுத்தும் புதிய சுற்றறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் புதியதாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




