பொருளாதார நெருக்கடிகளும் அதனால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கங்களினால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்பிலும் வவுனியா சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி ந. பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சி. சுதாகரன் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.
குறித்த கருத்துரைகளுக்கு பின்னர் பொதுமக்களிடமிருந்து தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் அதனால்
ஏற்படக்கூடிய உளநல பிரச்சினைகள் மற்றும் தற்கொலைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெற்று இருந்தது.
குறித்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் உட்பட பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




