திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து இங்குள்ள பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டுள்ளார் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் மௌலவி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்துநகர் விவசாயிகளின் காணி மீட்புக்கான போராட்டம் இன்றுடன் (06) 20ஆவது நாட்களாக சத்தியாக் கிரகப் போராட்டம் இடம் பெற்று வருகின்றன.
இது தொடர்பில் அவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்கள் தற்போது அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.புல்மோட்டை தொடக்கம் குச்சவெளி மீனவர்கள் பிரச்சினை நில உரிமைக்கான போராட்டம் என தற்போது முத்து நகர் வரை செல்கிறது.
கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் பொய் சொல்லி வாக்குகளை பெற்று முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளை ஏர்ஜன்ட் மூலமாக கொழும்பில் விற்றார்கள். முஸ்லீம் தலைமைகளை புறந்தள்ளி விட்டே தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முஸ்லீம் சமூகம் ஆதரவளித்தது பொதுத் தேர்தலிலும் ஆதரவளித்தார்கள்.
இதற்காக ஜனாதிபதி முத்து நகர் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். ஊழல்,இனவாதம்,போதைப் பொருள் தடுப்பு போன்ற விடயங்களுக்கு எதிராக உள்ள அநுர அரசாங்கம் இது போன்று முத்து நகர் விவசாயிகளுக்காகவும் ஆதரவாக செயற்பட வேண்டும்.
இது போன்று கிழக்கு மாகாண மக்கள் சிவில் சமூகம்,உலமாக்கள் ஒன்றினைந்து இம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். எதிர்வரும் ஜூம் ஆ தொழுகையின் பின் அனைத்து பள்ளிகளும் இணைந்து உலமா சபை இணைந்து இம் மக்களின் அநீதிக்காக குரல் கொடுங்கள் இவர்களுக்காக கொழும்பில் சுமார் 10ஆயிரம் கொயொப்பங்களை சேகரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்.-என்றார்.




