வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்தோற்சவம்;பல பாகங்களிலுருந்த புடைசூழ்நத மக்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.  

வல்லிபுர ஆழ்வாருக்கு பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று  அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து  வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் கற்கோவளம் கடற்கரையில்  சமுத்திர தீர்த்தமாடினார்..

வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையெடுத்துச் சென்றுள்ளனர்.  

பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை,  பால்குடம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 

வல்லிபுர ஆழ்வார் கடலில் சமுத்திர தீர்த்தமாடும் காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *