முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பெரியகுளம் வயல்வெளியில் நோய்வாய்ப்பட்டிருந்த யானைஇன்று உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் காட்டுயானை ஒன்று நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்தநிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவரசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
Advertisement
இந் நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியரும், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர்களும் நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை வழங்கியிருந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது.