முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் இரு வேறு வேறு பகுதிகளில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆண்டு நினைவேந்தன் நிகழ்வு சிறப்பு அனுஷ்டிக்கப்பட்டது. 

தர்மபுரம் பகுதியிலும் கரைச்சுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் தனியார் மண்டபம் ஒன்றில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது .

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் முதற்பெண் மாவீரர் 02ம் லெப் மாலதியின் 38வது நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று (10) மாலை, 3.00மணியலவில் நடைபெற்றது. 

 இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலுமாலிதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலருங்கள் வந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *